மும்பையை விட்டு வெளியே வந்த கெளதம் மேனன் & சிம்பு? அப்போ வெந்து தணிந்தது காடு ??

இயக்குனர் கெளதம் மேனன் எழுதி முடித்த வரையில் வெந்து தணிந்தது பட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுவிட்டன.

இயக்குனர் கெளதம் மேனன் எழுதி முடித்த வரையில் வெந்து தணிந்தது பட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுவிட்டன.

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னனி இயக்குனர் பட்டியலில் முதன்மையாக இருந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்த தயாரிப்பில் படம் இயக்கி அது தோல்வி பெற்று, பின்னர் பெரும் கடனில் சிக்கி தவித்து வந்தார். அவரது இயக்கத்தில் உருவான திரைப்படங்களும் முழுமை பெறாமல் இருந்து வருகிறது.

unknown node

இவர் தற்போது வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சிம்பு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார்.

கெளதம் மேனனுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அதாவது, படத்தின் கிளைமேக்ஸ் எழுதாமல் படம் இயக்க கிளம்பிவிடுவார். அப்போது என்ன தோன்றுகிறதோ அதனை கொண்டு படத்தை இயக்கி முடித்து விடுவார்.

unknown node

தற்போது அதே நிலையில் தான் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அதாவது, கெளதம் எழுதி முடித்த காட்சிகள் வரை மட்டுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளதாம். மீதி படம் கெளதம் மேனன் படத்தை முழுதாக எழுதினால் மட்டுமே படமாக்க முடியும் என்கிற நிலையில், படக்குழு தற்போது மும்பையில் இருந்து திரும்பி சென்னை வந்துவிட்டதாம்.

விரைவில், படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் மீண்டும் மும்பையில் நடைபெறும் என கூறப்படுகிறது. கெளதம் மேனனின் இந்த படம், துருவ நட்சத்திரம் போல ஆகிவிட கூடாது என ரசிகர்கள் வேண்டிக்கொண்டு இருக்கின்றனர்.

மும்பையை விட்டு வெளியே வந்த கெளதம் மேனன் & சிம்பு? அப்போ வெந்து தணிந்தது காடு ??