AK62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்.! அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குகிறார் தெரியுமா..?

அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் , படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த

அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் , படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக ஒரு சில தினங்களிலே படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி  விட்டதாகவும் அவருக்கு பதிலாக AK62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்  இசையமைப்பதாகவும்  தகவல்கள் பரவி வருகிறது.

unknown node

Vignesh Sivan quits AK62 [Image Source: Twitter ]

இது உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலா என ரசிகர்களாக குழப்பத்தில் இருந்த நிலையில், இதை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகாத நிலையில்விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து ட்விட்டரில் ஏகே 62 என்ற பெயரை நீக்கி இருந்தார்.இதன் மூலம் அவர் இயற்கை சிக்ஸ்டி டு திரைப்படத்தை இயக்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

unknown node

Vignesh Shivan About Ak 62 [Image Source: Twitter ]

இதனையடுத்து, விக்னேஷ் சிவன் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி விக்னேஷ் சிவன்  அடுத்ததாக விஜய் சேதுபதி வைத்து ஒரு ஆக்சன் திரைப்படம் இயக்க உள்ளதாகவும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

unknown node

vijay sethupathi vignesh shivan

ஏற்கனவே, இவர்களது கூட்டணியில் வெளியான நானும் ரவுடிதான் ,காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய  படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த வெற்றிகளை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒரு படத்தின் மூலம் இணையுள்ளதாக பரவும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி தற்பொழுது பாலிவுட்டில்  அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் வில்லனாக  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.