விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்” .இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறாதாம்.
unknown nodeஏனெனில் கடந்த கால இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது, ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. மீண்டும் அது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்காகவும், கொரோனா மூன்றாவது அலை தற்போது ஓய்ந்துள்ளது இதனால், கொரோனா பரவல் ஏதும் மீண்டும் வந்துவிட கூடாது என்பதாலும், இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
unknown nodeஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பலர் நடித்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeபடத்திலிருந்து வெளியான அரபிக்குத்து பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அடுத்ததாக படத்திற்கான ட்ரைலர் அத்துடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.