விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
unknown nodeThalapathy 67 Shooting Today [Image Source: Twitter ]
படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeThalapathy 67 [Image Source: Twitter ]
இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஆம், தளபதி 67 படம் lCU படமாக எடுக்கப்படவுள்ளதாம்.
இதையும் படியுங்களேன்-கமல் சார் ரொம்ப பிடிக்கும்…ஆனால் அது நடக்கவில்லை…சோகத்துடன் பேசிய தேவிபிரியா.!
unknown nodeThalapathy 67 [Image Source: Twitter ]
எனவே, தளபதி 67 படத்தின் lCU தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம். அது விஜயின் 70-வது திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. மேலும், விஜயின் 68-வது படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளார் என ஒரு தகவல் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.