விஜய்க்கு வில்லனாகும் சிம்பு...'தளபதி 67′ படத்தின் வெறித்தனமான அப்டேட்.!

தளபதி 67 படத்தில் நடிகர் சிம்பு விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகர் சிம்பு விஜய்க்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தளபதி 67

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 67 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

Thalapathy 67 New Update Lokesh [Image Source : Twitter ]

இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட, பல பேட்டிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை தான் தான் இயக்கிறேன் என்பதை அறிவித்துவிட்டார். அது மட்டுமின்றி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

தளபதி 67 படத்தில் நடிக்கும் பிரபலங்கள்

unknown node

Thalapathy 67 New Update [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

விஜய்க்கு வில்லனாக சிம்பு

unknown node

Silambarasan In thalapathy 67

தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. அது என்னவென்றால், தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் சிலம்பரசன் நடிக்கவுள்ளாராம். ஆனால் இந்த தகவல் வதந்தி தகவலாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.