அடி தூள்....! மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி.? வெளியான சூப்பர் தகவல்.!

மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும்

மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

unknown node

இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளாராம்.

unknown node

அந்த திரைபடத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல்பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஸ்பெஷல் தகவல் என்னவென்றால், அந்த படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையதாம்.

இதையும் படியுங்களேன்-கோலிவுட்டே உன் அரசாங்கம்.! ரஜினி, கமல், விஜய்யை முந்திய தனுஷ்.! இதுதான் மிகப்பெரிய சாதனை..!

unknown node

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் தளபதி 67 படத்திற்கான கதைமெருகேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த படத்திலும் எழுத்தாளராக ரத்ன குமார் தான் பணியாற்றி வருகிறார். எனவே இந்த படம் முடிந்த பிறகு அவர் ராகவலாரன்ஸை  வைத்து இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.