என்னது..?! 'லியோ' திரைப்படத்தில் நடிகர் தனுஷா..? வெளியான புதிய தகவல்.!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் 100 கோடி

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் 100 கோடி பட்ஜெட்டில்  தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

unknown node

leo [Image Source : Twitter]

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், படத்தில் கேமியோ ரோலில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

unknown node

dhanush leo [Image Source : Twitter]

இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார். அவரை போலவே ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் லியோ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

vijay and dhanush [Image Source : Twitter]

இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்றே கூறலாம். மேலும் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.