நடிகை சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து 4 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக்கொண்டார்கள்.
unknown nodeSamantha Ruth Prabhu [Image Source: Twitter ]
இதனையடுத்து, சமந்தா தான் நடிக்கவுள்ள படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில், சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் என ஒரு செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் கூறிய அறிவுரையின் படி சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeSamantha [Image Source : Twitter]
ஆனால், இந்த தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தி தகவலா என்பது தெரியவில்லை. எனவே இந்த திருமணம் குறித்த செய்திக்கு சமந்தாவே விரைவில் விளக்கம் கொடுப்பார் எனவும் கூறப்படுகிறது.
unknown nodeShaakuntalam[Image Source : Google]
மேலும், சமந்தா தற்போது சாகுந்தலம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.