நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (வயது 67) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு எந்த நிகழ்வுகளிலும் தனது இருப்பை பெரும்பாலும் காட்டிகொள்ளாத கவுணடமணி, தனது குடும்பத்தை சினிமா உலகில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார் என்று தான் கூறவேண்டும்.
இவரது மனைவி சாந்தி (வயது 67) கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக கவுண்டமணி மனைவி சாந்தி உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
இவரது உடல் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த சாந்தி அவர்களின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர்.