ராகவா லாரன்ஸ் படத்தில் இணைந்த ஜி.வி.!

நடிகரும், இயக்குனரும்,நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர் பொல்லாதவன், ஆடுகளம்,

நடிகரும், இயக்குனரும்,நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர் பொல்லாதவன், ஆடுகளம்,  ஜிகர்தண்டா உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கான அட்வான்ஸ் பணத்திலிருந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் டைட்டில் லுக்கை வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

unknown node