ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம் டா மாப்ள படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும் படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி என்றும் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்ள என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக பிகில் பட நடிகையான அம்ருதா ஐயர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டேனியல் , பிக்பாஸ் ரேஷ்மா பசுபதி , ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்,
இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் சிங்கிள் பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாகவும் படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி என்றும் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
unknown node