அதிகம் பெண் ரசிகைகளை கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு சில பிரபலங்கள் மட்டும் வருகை தந்தனர்.
திருமணத்தை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் மனைவியுடன் சுற்றுலா சென்று அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 1 மாதங்கள் கடந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது மனைவி நர்மதாவுடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் ” ஒரு மாதம் கொஞ்சம் குரும்பு & நிறைய காதல்” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node