HBD Karthik: அலைகள் ஓய்வதில்லை தொடங்கி…ஓயாமல் நிற்கும் நவரச நாயகனின் திரை பயணம்!

navarasa nayagan karthik

1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று சென்னையில், பழம்பெரும் நடிகர் ஆர். முத்துராமனுக்கு நான்கு பிள்ளைகளில் முதல் மகனாக பிறந்தார் நம் நவரச நாயகன் கார்த்திக். முரளி கார்த்திகேயன் முத்துராமன் என்ற பெயர் நாளடைவில் நவரச நாயகன் என்று மாறுபட்டது. கார்த்திக்கின் முதல் மனைவி ராகினியுடன், கௌதம் மற்றும் கெயின் என்ற இரு மகன்களும், ரதியுடன் இரண்டாவது திருமணத்தில் இருந்து திரன் என்ற மற்றொரு மகனும் உள்ளனர்.

கடந்த 1981-ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் கார்த்திக், இன்னும் ஓயாமல் 2023ல் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகர் மட்டும்மல்லாமல், பின்னணிப் பாடகரும் அரசியல்வாதியும் கூட சொல்லாம். இவர் தான் நடித்த முதல் படமான அலைகள் ஓய்வதில்லை  படத்தின் மூலம்  தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று கொண்டார். 1960 ஆம் ஆண்டு பிறந்த நம்ம நவரச நாயகன் கார்த்திக் இன்றுடன் 63 வயதாகிறது.

இவரது பிறந்தநாளான இன்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை சமூக வலைத்தளங்களில்  தங்களது வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.  1981-ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் இன்றும் ஓயாமல் நடித்து வரும், கார்த்திக் இதுவரை நடித்துள்ள சில படங்களை பற்றி ஒரு பார்வை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், சொந்தமாகத் தனது நடிப்பு திறமையை நிரூபித்து தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நடிகரானார்.

அதன் வரிசையில்,  ஆரம்ப கால கட்டங்களில், கார்த்திக் இயக்குனர் RV உதய குமாருடன் மூன்று முறை கைகோர்த்து நடித்தார். பின்னர், அவர் பல நகைச்சுவை படங்களில் கவுண்டமணியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். சில சமயங்களில் வுண்டமணிக்கே கவுண்டர் கொடுத்திருப்பார். இப்படி, தொடர்ச்சியாக இவர் நடித்த படங்களும் ஹிட் ஆக 1980கள் மற்றும் 90 களில், கார்த்திக் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார்.

அந்த வகையில், ரஜினி கமல்ஹாசன் ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்துகொண்டிருந்த சமயத்தில் கார்த்தியும் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருந்தார். 1984-ல்நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக நெகடிவ் ரோலில் நடித்ததற்காக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனை தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை கார்த்திக்கின் வாழ்க்கையில் ஒரு பொற்காலமாக அமைந்தது.

அதாவது, 1987ஆம் ஆண்டு அவர் நடித்த வண்ண கனவுகள் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, கார்த்திக் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை வழங்கினார். பின்னர், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, இதய தாமரை, கிழக்கு வாசல் போன்ற வசூல் ரீதியான வெற்றிகளைத் தொடர்ந்து, அவர் கோபுர வாசலிலே என்ற படத்தின் மூலம் புகழின் உச்சத்தை தொட்டார்.

பின்னர், ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுப்பதில் கவணம் செலுத்திய கார்த்திக், 1992-ல் அமரன் படத்தில் நடித்தார், இது ஒரு அதிரடித் திரைப்படமாகும். இந்த படத்தில் கார்த்திக் ஒரு அனாதையாக நடித்திருந்தார், பின்னர் அவர் டான் ஆகிறார் என்பது தான் படத்தின் கதை. இந்த திரைப்படம் வெளியானபோது, யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்று தந்தது.

அதன் ஒரு பகுதியாக, படத்தில் கார்த்திக் பாடிய பாடல் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது. அதில், ஆதித்யன் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான ‘வெத்தல போட்ட சொக்குல’ பாடலாகும். இன்னும் இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. இன்றும் கூட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

2010க்கு பின் சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட நவரச நாயகன், 2015-ல் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய அனேகன் படத்தில் நடிகர் தனுஷுக்கு எதிராக நெகட்டிவ் ரோலில் நடித்தார். பின்னர், சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், அவரது மகன் கவுதம் கார்த்திக் நடித்த மிஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும், தேவ் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த கார்த்திக் இறுதியாக அந்தகன் படத்தில் நடித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்