மீண்டும் தல படத்தை தயாரிக்கும் போனி கபூர் ....!

It has been reported that actor Ajith's 61st film will be directed by H. Vinod and produced by producer Ponikapur.

நடிகர் அஜித்தின் 61 வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கான டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட வரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற கேள்வி எழும்பி வருகின்ற நிலையில், மீண்டும் அஜித் திரைப்படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக செய்திகள் வெளியானது.

மேலும் தற்போது இதனை தொடர்ந்து அஜித்தின் 61 ஆவது திரைப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.