கார்த்திகேயா 2 வெற்றிக்குப் பிறகு, நடிகை அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக ரவிதேஜாவுடன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், இருவரும் நடிக்க வாய்ப்புள்ளதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
unknown nodeஅந்த வகையில், இந்தப் படத்தை கார்த்திக் கட்டமனேனி இயக்குவதாகவும், இப்படம் இந்தியா முழுவதும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் கூட்டணி ஒரு வேளை உறுதியானால், இருவரும் நடிக்கப்போகும் படம், ஹாலிவுட் படத்தின் ரீமேக் ஆக்ஷன் என்டர்டெய்னர் ஆக இருக்கும் என்ற வதந்திககளும் இணையத்தில் உலா வருகிறது.
unknown nodeபிரேமம் படத்தில் நடித்து பிரபலமான அனுபமா அடிக்கடி தனது கலக்கல் போட்டோஷூட் மூலம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை உற்சாகம் செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்களேன்-ஒரே டேக்கில் அந்த விஷயங்களை செய்து காட்டி அசத்திய கமல்ஹாசன்.!
unknown nodeஅந்த புகைப்படத்தில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் மஞ்ச நிற சேலையில் போஸ் கொடுத்துள்ளதால், ரசிகர்கள் மஞ்ச காட்டு மைனா செம்ம கியூட் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் இப்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node