இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில்கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
unknown nodeVaaVaathi [Image Source: Google ]
படத்தின் வெற்றிக்கு கதை எந்த அளவிற்கு ஒரு காரணமோ அதே அளவிற்கு படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காரணம் என்றே கூறலாம். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக வாவாத்தி பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம்.
unknown nodeஇதில் சூப்பரான விஷயம் என்னவென்றால், அந்த பாடலை தனுஷ் தனது குரலில் பாடி இருந்தார். தனுஷ் பாடிய அந்த வெர்ஷன் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
unknown nodeVaathi box offfice [Image Source : Google ]
மேலும், ‘வாத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் 67 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், தெலுங்கில் மட்டும் படம் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.