சியான் 60 எப்போது வெளியாகிறது...? இதோ லேட்டஸ்ட் அப்டேட்..!!

Vikram starrer chiyaan 60 is all set to release in September

விக்ரம் நடிக்கவுள்ள சியான் 60 படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  மேலும் நடிகை சிம்ரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் எப்போது வெளியாகிறது என்பதை குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் அந்த வகையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விட்டு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.