ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களை வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் அரண்மனை. இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது.
unknown nodeஇந்த மூன்றாம் பாகத்தில் ஆர்யா, சுந்தர் சி, சாக்ஷி அகர்வால், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திகில் நிறைந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார்.
unknown nodeபடத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுத பூஜையில் திரையரங்குகளில் வெளியாகிறது.
unknown nodeஇந்த நிலையில், வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திகில் மர்மம் நிறைந்த அரண்மனை-3யின் டிரைலர் வரும் 30-ஆம் தேதி மாலை 5-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
It’s time to enter the crazy world of #Aranmanai3.????????
#Aranmanai3trailer releases on sep 30th at 5PM. #SundarC @RedGiantMovies_@Udhaystalin @arya_offl @khushsundar @CSathyaOfficial @RaashiiKhanna_ @uksrr @FennyOliver @kalaignartv_off @saregamasouth @RIAZtheboss pic.twitter.com/Ez1Vbxpw82
— Red Giant Movies (@RedGiantMovies_) September 28, 2021