பொம்மை திரைப்படம் எப்படி இருக்கு..? முதல் விமர்சனம் இதோ.!!

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இய்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில்

bommai review

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இய்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொம்மை படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது ” பொம்மை திரைபடம் பார்த்தேன். நடிப்பரசன் எஸ்.ஜே.சூர்யா தன்னை மீண்டுமொருமுறை பலமான நடிப்பால் பதம் பார்க்கிறார்.. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னியிருக்கிறார். ராதாமோகன் வழக்கமான பாணியிலிருந்து விலகி செய்த பொம்மை ரசிக்கவே வைக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான ரிச்சர்ட் எம் நாதன்கண்களால் படம் பளீச்சிடுகிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

unknown node