“டெல்லி கணேஷ் மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன்”…ரஜினிகாந்த் இரங்கல்!
அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் எக்ஸ் வலைத்தளத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதிச்சடங்கு நாளை 11 மணி அளவில் நடைபெறும் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்து இருந்தார்.
எனவே, அவருடைய உறவினர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சென்று தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். கார்த்தி, சத்யராஜ், மணிகண்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரடியாகச் சென்று தங்களுடைய அஞ்சலியைச் செலுத்தி இருந்தார்கள். மேலும், சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என வருத்தத்துடன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி
— Rajinikanth (@rajinikanth) November 10, 2024
மேலும், ரஜினிகாந்தும் மறைந்த நடிகர் டெல்லி கணேஷும் இணைந்து பாபா, சாந்தி கிராந்தி, திரு. பரத், பாண்டியன், மூன்று முகம், புதுக்கவிதை, வேலைக்காரன், மனிதன் , நான் அடிமை இல்லை, எங்கேயோ கேட்ட குரல், பொல்லாதவன் , சிவப்பு சூரியன், சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025