இப்படி ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்.!

இயக்குனர் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால். இந்த படத்தில் அஞ்சலி பாட்டீல்

இயக்குனர் மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குதிரைவால். இந்த படத்தில் அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மனிதன் எழுந்தவுடன் தன்னுடன் குதிரைவால் இணைக்கப்பட்டிருப்பதை எப்படி உணர்கிறான் என்பதுதான் படம். நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்ததோடு பாராட்டியுள்ளனர்.

unknown node

படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது ” இந்த படம் மிகவும் பிரமிப்பான திரைப்படம். இப்படி ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.. கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பாருங்கள்” என கூறியுள்ளார்.