சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை – சாய் பல்லவி..!!

Actress Sai Pallavi has said that she wants to be known as the best actress

மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை என்று நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தனது நடனத்தால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை சாய் பல்லவி கூறியதாவது ” நான் நடன கலைஞராக அடையாளம் காண விரும்பவில்லை. மிகச் சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதுதான் எனக்கு ஆசை.

நான் நடனம் செய்து அது அழகாக இருந்தது என்றால் என்  ஒருத்தியோட தலைமை மட்டுமில்லாமல்  அதை சுற்றி நிறைய பேரின் கஷ்டமும் உள்ளது.  நடனம் என்றால் நான் மட்டும் கிடையாது நல்ல பாடலை அமைத்து கொடுக்க வேண்டும் கதைக்கு ஏற்ற மாதிரி அந்த பாடல் இருக்க வேண்டும் டான்ஸ் மாஸ்டர் நல்ல அரசை அமைக்க வேண்டும் இது போன்ற பல விஷயங்கள் உள்ளது ஆனால் நடிப்பு என்றால் நான் மட்டும் தான் இருப்பேன் அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். என்றும் கூறியுள்ளார்.