இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன்... வாத்தி பட இயக்குநர் கருத்து..!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது தனுஷை வைத்து வாத்தி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும்

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது தனுஷை வைத்து வாத்தி எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Vaathi dhanush [Image Source : Google ]

இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் வெங்கி அட்லூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் நீங்கள் மத்திய அமைச்சரானால் என்ன செய்வீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

unknown node

Venky Atluri [Image Source : Google ]

அதற்கு பதில் அளித்த வெங்கி அட்லூரி ” இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லப்போவது சற்று சர்ச்சையான பதிலாக இருக்கலாம். நான் மத்திய அமைச்சரானால்  இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை கண்டிப்பாக  ஒழித்து விடுவேன். சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது.

unknown node

Venky Atluri [Image Source : Google ]

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை மட்டும் நடைமுறைப்படுத்துவேன்” என கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் சர்ச்சைக்குரியதாக உள்ளது  என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.