நடிகர் விஜய் தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeleo [Image Source : Twitter]
இந்த திரைப்படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeLEO VIJAY [Image Source : Twitter]
இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் சஞ்சய் சத்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் பாலிவுட்டிலும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏனெனில், கேஜிஎப் 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சஞ்சய் தத்தின் மார்க்கெட் எல்லா மொழிகளிலும் உயர்ந்துவிட்டது.
unknown nodeSanjayDutt getting ready for Leo [Image Source : Google ]
இந்த நிலையில், நடிகர் சஞ்சய் தத் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர்-க்கு இன்று சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே லியோ படக்குழு மிஷ்கின் நடிக்கும் காட்சிகளை படமாக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeunknown node