வயதில் குறைந்தவரை தான் திருமணம் செய்து கொள்வேன் – கவிதா ராதேஷ்யாம்...!

Actress Kavita Radheshyam has said on her Instagram page that she will get married at a young age

வயதில் குறைந்தவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை கவிதா ராதேஷ்யாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான கவிதா ராதேஷ்யாம் தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படங்களை தொடர்ந்து பார்டர், காசுரன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்க்கு திருமணம் என்று சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு யாருடனும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. 5 வருடங்களுக்குப் பின் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக இருக்கிறேன். நிச்சயமாக என்னை விட வயதில் குறைந்தவரை தான் திருமணம் செய்து கொள்வேன். என்று கூறியுள்ளார்.

unknown node