யார் மேல் காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்வேன் – சுரபி..!!

Actress Surabi has said that she will definitely marry anyone who falls in love with her.

தனக்கு யார் மேல் காதல் வருகிறதோ அவரை கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்று நடிகை சுரபி கூறியுள்ளார்.

நடிகை சுரபி தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழ் அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தற்போது ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக அடங்காதே என்ற படத்திலும், 1 கன்னட படத்திலும், 3 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சுரபி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்த விஷயங்களை கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவரிடம் உங்கள் திருமணம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு..? அவர் கூறியது ” எனக்கு யார் மேல் காதல் வருகிறதோ அவரை கண்டிப்பாக திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.