அந்த விஷயத்துக்கு கெஞ்சவே மாட்டேன்...நடிகை சமந்தா அதிரடி பேச்சு.!

நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள ‘சகுந்தலம்’ படம்  திரைப்படம் வரும்  “ஏப்ரல் 14 அன்று  இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில்

நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள ‘சகுந்தலம்’ படம்  திரைப்படம் வரும்  “ஏப்ரல் 14 அன்று  இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழுவினருடன் நடிகை சமந்தாவும் தீவிரமாக இறங்கியுள்ளார்.

unknown node

Samantha Ruth Prabhu [Image Source: Twitter ]

அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் சம்பளம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய சமந்தா ” ஒரு நடிகை ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் முன் வந்து சம்பளத்தைத் கொடுக்கவேண்டும்.

unknown node

samantha [Image Source : Twitter]

சம்பளத்தை கொடுங்க என கெஞ்சக்கூடாது. நான் அப்படி தான் அந்த விஷயத்துக்கு கெஞ்ச மாட்டேன். ஏனென்றால், நாம் ஒரு படத்தில் நடிப்பதற்கு மிகவும் கடுமையாகப் போராடுகிறோம். ஆனால், அதற்கான சமமான சம்பளம் கொடுக்கவேண்டும்.

unknown node

samantha [Image Source : Twitter]

ஒருவருடைய கடின உழைப்பு மற்றும் அந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு  தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து உங்களுக்கு இவ்வளவு சம்பளம் தருகிறோம் என சந்தோசத்துடன் கூறி கொடுக்கவேண்டும்” என கூறிள்ளார். மேலும் சமந்தா இந்த ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கியதாக ஒரு தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.