பிரபல நடிகரான சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்கள். இருவரும் காதல் செய்வதை சித்தார்த் கடந்த ஆண்டு அதிதி பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அறிவித்திருந்தார். பிறகு அடிக்கடி ஒற்றாக சுற்றுலா சென்று ஒன்றாக எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.
unknown nodesiddharth and aditi dance [Image Source : Google ]
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, இவர்கள் இருவரும் ‘எனிமி ‘ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த டம்..டம் பாடலுக்கு ஜோடியாக செம அழகாக நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டிருந்தார்கள். அந்த வீடியோவும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.
unknown nodesiddharth and aditi [Image Source : Google ]
இந்நிலையில், நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக பரவி வரும் தகவலுக்கு அதிதி ராவ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் ” மக்கள் பேசத்தான் செய்வார்கள். அவர்கள் பேசுவதை தடுக்க முடியாது. அவர்களுக்கு பிடித்ததை அவர்கள் செய்கிறார்கள்.
unknown nodeSiddharth and AditiRaoHydari ‘ [Image Source: Twitter ]
எனவே, எனக்கு பிடித்ததை இது தான். அதனால் நான் அதை செய்கிறேன் என்று கூறிஉள்ளர். மேலும், நடிகர் சித்தார்த் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல நடிகை அதிதி ராவ் காந்தி டாக்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.