எனது வீட்டை மருத்துவமனைக்கு கொடுக்க போகிறேன் – நடிகர் பார்த்திபன் அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இப்படி உலகம் முழுக்க இந்த நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.
24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார். அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்” என்று கூறியுள்ளார்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025