சிவகார்த்திகேயனை அண்ணா என்று அழைப்பது எனக்கு வருத்தம் தான்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அவர் மிக சின்ன வயதிலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்ததாகவும், அதனால் தான் தனது வாழ்க்கையில், திருப்புமுனை ஏற்பட்டதாகவும், தான் தங்கையாக நடித்ததது குறித்து வருத்தபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இனிவரும் படங்களில் சிவகார்த்திக்கேயன் மற்றும் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்தால் சரியாகிவிடும் என்றும், சிவகார்த்திக்கேயனை அண்ணா என்று அழைப்பது எனக்கு வருத்தம் தான் என்றும், படம் பார்த்தால் இந்த கேள்விகள் எழவே எழாது என தெரிவித்துள்ளார்.