சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
விடுதலை படத்தின் முதல் பாடல்
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதல் பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும், அந்த பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
unknown nodeஅதன்படி, தற்போது ‘விடுதலை’ படத்தின் முதல் பாடலான “ஒன்னோட நடந்தா” பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் வரும் இசையும், தனுஷின் குரலும் பாடலை கேட்போர்களை உருகவைத்துள்ளது. பாடலை கேட்ட அனைவரும் பாடல் அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
விடுதலை
unknown nodeSoori Viduthalai [Image Source: Twitter ]
இந்த விடுதலை திரைப்படத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திலும் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.