இசைப்புயல் இசையில்...வைகைப்புயல் குரலில்..'மாமன்னன்' படத்தில் புது பாடல்.!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும்  'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே

Vadivelu AND ARRahman

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும்  ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

unknown node

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சின்ஹா படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில்,  இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் வடிவேலு ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

unknown node

இதற்கான புகைப்படங்களை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ” வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

unknown node

MaaMannan MOVIE [Image Source : Twitter / @CinemaWithAB ]

எனவே, இசைப்புயல் இசையில் வைகை புயல் ஒரு பாடலை பாடியுள்ளதால் அந்த பாடல் எப்போது வெளியாகும் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 1-ஆம் தேதி வெளியான நிலையில், விரைவில் படத்தின் முதல் பாடலுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.