தற்போது திரைக்கு வந்துள்ள சூப்பர் டீலக்ஸ், ஐரா ஆகிய 2 படங்களும் தற்போது திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளன
சமீப காலமாக திரைக்கு வரும் அனைத்து புதிய படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க விதமாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் திரையரங்கில் கேமரா எடுத்து செல்லவும் தடை விதித்தது. ஆனாலும் பாதுகாப்பையும் மீறி புதிய படங்கள் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிறது. புதியதாக வருகின்ற படங்கள் திரைக்கு வந்த சில மணி நேரங்களில் இணையதளங்களிலும் வெளியாகி விடுகிறது.
சமீபத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம், கண்ணே கலைமானே, எல்.கே.ஜி ஆகிய படங்களும் இணையதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது திரைக்கு வந்துள்ள சூப்பர் டீலக்ஸ், ஐரா ஆகிய 2 படங்களும் தற்போது திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
இந்த படங்களை பலர் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள். இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சூப்பர் டீலக்ஸ், ஐரா ஆகிய படங்களின் வசூல் குறையும் என கூறப்படுகிறது.