விஷாலின் "சக்ரா" திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை..!

The Chennai High Court has imposed an interim stay on the release of Vishal starrer Chakra in the insurance rights case.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் காப்பீட்டு உரிமை விவகாரத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், காப்பீட்டு உரிமை விவகாரத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது, ஆம், தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து இயக்குனர் படமாக்கி உள்ளதாக ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஆனால் படம் திட்டமிட்ட படி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலின் "சக்ரா" திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை..!