'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

unknown node

படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டினார்கள். சமீபத்தில், படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக கடந்த மாதம் இயக்குனரே தெரிவித்ததையடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

unknown node

கடந்த 2021-ல் வெளியான இந்த திரைப்படம் தற்போது, புகழ்பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதனை படக்குழு அதிர்க்கர்ப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த திரைப்பட விழா மாஸ்கோவில் ஏப்ரல் 20 முதல் 27 வரை நடைபெறவுள்ளது.

unknown node

இதற்கிடையில், படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. ஆர்யாவுடன் அவர் சைக்கிளில் செல்லும் கட்சியை மீம் கிரியேட்டர் பல வகையில், மீமாக செய்து பதிவிட்டு வந்தனர். இது சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.