"சக்ரா" படத்தின் மிரட்டலான "ஸ்னீக் பீக்" வீடியோ...!

The sneak peek video for the movie Chakra starring Vishal has gone viral.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்திற்கான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க விஷால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node