ஆயுத பூஜையை குறிவைத்த சூர்யா... சூர்யா 40 படத்தின் மிரட்டலான அப்டேட்..!

It has been reported that Surya's 40th film is scheduled to release on October 14 on Armed Puja.

சூர்யாவின் 40 வது திரைப்படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார், மேலும் நடிகர் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது ஆம். இந்த திரைப்படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.