350 திரையரங்குகளில் வெளியாகும் "சக்ரா".. 19-ம் தேதி புரட்சி தளபதியின் மிரட்டல்..!

Chakra, starring Vishal, is said to be released in 350 theaters in Tamil Nadu. The film is currently U / A sensor certified

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு தற்போது யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா . இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் விஷால் இராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தினை மே மாதம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சக்ரா படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படத்தினை பிப்ரவரி 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தமிழகத்தில் 350 திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு தற்போது யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.