மீண்டும் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகிறாரா தனுஷ்.? அடுத்ததாக ஹிட் பட இயக்குனராமே.?

It has been reported that actor Dhanush will next be seen in a film directed by Mari director Balaji Mohan.

நடிகர் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன்,ஜகமே தந்திரம் மற்றும் “அத்ராங்கே” என்ற பாலிவுட் படம் ஆகியவை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களும்,,தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தினையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற மாரி மற்றும் மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் , படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.