நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தற்போது, நடிகர் விஜயின் பிகில் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருகிறார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தனது நபர்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திருமணத்தை வட இந்தியாவில் நடத்துவதா? அல்லது வெளிநாட்டில் நடத்துவதா? என ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.