2011 இல் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தொலைக்காட்சியில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான யுவினா பார்த்தவி, வீரம் திரைப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு உடன் நல்லசிவத்தின் பேத்தியாக நடித்ததற்காக பாராட்டையும் புகழையும் பெற்று கொண்டார்.
அப்பொழுது, சிறுமியாக இருந்த அவர் பத்து ஆண்டுளை கடந்துள்ள நிலையில், பெரியவளாக வளர்ந்துவிட்டாள். அவள் இப்போது ஒரு மாடல் அழகி போல் இருக்கிறாள். அவரது சமீபத்திய வீடியோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் திரைப்படம் சைரன். இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் யுவினா பார்த்தவி கலந்து கொண்டுள்ளார்.
‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை நாளை வெளியாகும் திரைப்படங்கள்.!
சைரன் திரைப்படத்தில் அவர் ஏதேனும் கதாபாத்தித்தில் நடித்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், இந்த விழாவில் அவர் கலந்துகொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 10 வருடத்திற்கு முன், குழைந்தையாக இருந்த யுவினா பார்த்தவி, இப்பொழுது வளர்ந்து ஆளே மாறிவிட்டாரே என்று பதிவிட்டு வருகின்றனர்.
unknown node