80′ 90′ களில் துவங்கி தற்போது வரை இசை உலகை ஆட்டிப்படைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களது பேவைரைட் லிஸ்ட்களில் இவரது பாட்டுக்கள் கண்டிப்பாக இடம் பெறும். இவரது இசையின் தாக்கம் தற்போது உள்ள இசையமைப்பாளரின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.
இவர் இதுவரை 1000 படங்களுக்கு மேலே இசையமைத்து விட்டார். இவருக்கு தற்போது 75 வயது ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் வகையில் நடிகர் சங்கத்திலிருந்து தற்போது இளயராஜா 75 இசைக்கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதன் டிக்கெட் விலை 885 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU