எனக்கும் விஜய்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான்.! ஆனால் அது தவறாக எழுதப்பட்டுள்ளது.! – SAC விளக்கம்.!

மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மாத இதழில் வந்த தவறான செய்தி குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

unknown node

வீடியோவில் ” வார இதழ் ஒன்றில் என் பேட்டி ஒன்று வந்துள்ளது. நான் எப்போதும் வெளிப்படையாகவே பேசுவேன். என்னை பற்றியும், ‘நான் கடவுள் இல்லை’ என்கிற என் அடுத்த படத்தை பற்றி கேட்டிருந்தார்கள். விஜயகாந்த் பற்றி கேட்டிருந்தார்கள். எல்லாத்தையும் மனம் திறந்து சொல்லியிருந்தேன்.

unknown node

அதேபோல், என் குடும்பத்தை பற்றி தவறான ஒன்றை – நான் சொல்லாத செய்தியை பதிவிட்டிருக்கிறார்கள். நானும் ஷோபாவும் விஜய் வீட்டுக்கு வெளியில் காரில் காத்திருந்ததாகவும், ஆனால் விஜய் ஷோபாவை மட்டும் உள்ளே வரச்சொன்னதாகவும், அதன் பின் நாங்கள் இருவருமே திரும்பி வந்துவிட்டதாகவும் ஒரு தவறான செய்து வந்துள்ளது. அது உண்மை அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்..

unknown node

எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை தற்போது இருப்பது உண்மை தான். அதை நான் மறுக்கவே மாட்டேன்… ஆனால், விஜய்க்கும், அவன் தாயுக்குமான அதாவது எனது மனைவி.. உறவு எப்போதும் போல நன்றாக தான் இருக்கிறது”. என கூறியுள்ளார்.

unknown node
எனக்கும் விஜய்கும் பிரச்சனை இருப்பது உண்மை தான்.! ஆனால் அது தவறாக எழுதப்பட்டுள்ளது.! – SAC விளக்கம்.!