மணிமேகலை சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.
unknown nodeமணிமேகலை ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
unknown nodeஇந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய (Bmw)வகையை சேர்ந்த காரை வாங்கி தனது சமூக வலைதளபக்கங்களில் வெளிட்டார். அதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
புதிய கார் வாங்கினாலும் பழைய காரை மறவாத மணிமேகலை அந்த காரில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது கணவர் ஹுசைனுடன் வெளியே சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக இருவரும் சென்ற சென்ற கார் லாரி மீது உரசி விபத்துக்குள்ளாகியுள்ளது. நூலிழையில் மணிமேகலையும் ஹுசைனும் உயிர்தப்பியுள்ளனர்.
இது குறித்து மணிமேகலை தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவால் ” 2021 யார் மூஞ்சில முழிச்சேனே தெரியல… 2021ம் ஆண்டு எப்போ முடியும் என்று இருக்கு கால்ல சுடுதண்ணீர் கொட்டுச்சு, இப்போ கார் ஆக்சிடேன்ட் ஆகி இருக்கு, சும்மா கார் ஓட்டுலேமேனு எடுத்தேன் அது ஒரு குத்தமா… நல்ல வேளை பெரிய ஆக்சிடேன்ட் இல்லை, சின்னதா போச்சு… இந்த ஆண்டு முடியும் போது நான் வெடி வெடித்து கொண்டாடுவேன் ஏன் கூறியுள்ளார்”.
unknown node