ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானெரி நேற்று காலமானார்.
உலகம் முழுவதும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளது. அந்த வகையில், முதலில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உட்பட 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றவர் ஷான் கானெரி.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷான் கானரி 90 வயதான நிலையில் தூக்கத்திலையே நேற்று அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவிற்குப் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.