இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கலக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த ஜவான் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் வசூலில் இப்படம் தற்போது ரூ.700 கோடியை எட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று மும்பையில் செய்தியாளர் சந்தைப்பை (Jawan Press Meet) நடத்தினர் ஜவான் படக்குழு. நன்றி சொல்லும்விதமாக நேற்று நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, அனிருத், அட்லீ என பலரும் கலந்துகொண்டார்.
ஜவான் வெற்றிக்காக நன்றி தெரிவித்த ஷாருக்கான், இயக்குனர் அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்த நிகழ்வில் சில ஜாலியான நிகழ்வுகளும் நடைபெற்றது. குறிப்பாக, ஜவான் சக்சஸ்க்காக ஷாருக்கானை கட்டியணைத்து நடிகை தீபிகா படுகோன், சர்ப்ரைஸ்ஸாக முத்தம் கொடுத்து அசத்தினார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
unknown nodeShahRukhKhan – DeepikaPadukone [File Image]
ஷாரூக்கானுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோன், ஷாருக்கானுக்கு முத்தம் கொடுப்பது இது முதல் முறையல்ல… இவர்களது படங்களின் வெற்றி விழாவின் போது, இதுபோல் பல முறை தனது அன்பு முத்தத்தை பகிர்ந்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில், ஜவான் சக்சஸ் மீட்டில், ஷாருக்கான் – தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி பற்றியும், அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பு முத்தம் புகைப்படம் உட்பட மேடையில், அனிருத் பாட, இவர்கள் இருவரையும் ஆட வைத்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
