இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கலக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த ஜவான் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது. குறிப்பாக படம் வெளியான நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 520 கோடியே 79 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தது.
4 நாட்களில் உலகம் முழுவதும் 520 கோடி வசூல் செய்துள்ளது என்றால் அது சாதாரண விஷயம் இல்லை எனவே இந்த வசூலை பார்த்து பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகமும் ஆச்சரியத்தில் உள்ளது. இந்நிலையில், தற்போது ஜாவான் படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, ஜவான் படம் 5 நாட்களில் உலகம் முழுவதும் 550 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் காரணத்தால் வரும் நாட்களில் இன்னுமே படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜவான் படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது கிளம்பியுள்ளது.
ஏனென்றால், இதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 590 கோடி வரை வசூல் செய்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஜவான் படம் 5 நாட்களிலே உலகம் முழுவதும் 550 கோடி வசூலை தாண்டியுள்ள காரணத்தால் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் கொடுத்துவிடும். எனவே ஜெயிலர் வசூலை ஜவான் முறியடிப்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
