பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்றே கூறலாம். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இறைவன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodePS2 [Image Source : Twitter/@LycaProductions ]
இதற்கிடையில், ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதுப்படத்திற்கான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால், ஜெயம் ரவியின் 33-வது படத்தை இயக்குனரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தான் இயக்கவுள்ளதாகவும், படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeJR33 [Image Source : Twitter/@news_bugz]
மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அல்லது எ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவியிடம் கூறிவிட்டாராம். அந்த கதையும் அவருக்கு பிடித்துப்போக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம். மேலும், இந்த திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
unknown nodekiruthiga udhayanidhi [Image source : thehindu ]
இந்த கூட்டணி இணைவது உறுதியானால் விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கிருத்திகா உதயநிதி இதற்கு முன்பு வணக்கம் சென்னை, காளி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
