தரமான கேங்ஸ்டார் கதையில் ஜெயம் ரவி..?

It has been reported that actor Jayam Ravi will next play the role of Gangstar.

நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான பூமி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக பூலோகம் திரைப்படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம் இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி கேங்ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.