கோமாளிபடத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர்ஜெயம்ரவி, போகன் பட இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில் தனது25-வதுபடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டுமனிதன், என்றென்றும் புன்னகைஆகிய படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் ஜெயம் ரவி ராணுவ வீரராக நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது கூடுதல் தகவலாக இப்படத்தில்அர்ஜுன்முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். கதாநாயகியாக டாப்சி நடிக்க உள்ளார். இப்படமானது பாலிவுட்டில் வெற்றி பெற்றபேபிபடத்தின் ரீமேக் என கூறப்படுகிறது அந்த படத்தில்அக்ஷய்குமார், ராணா, டாப்ஸிஆகியோர் நடித்திருந்தனர். அப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.